“எழுந்திருங்க போனி கபூர்” : அஜித் ரசிகர்கள் கோபம்

10 செப், 2022 – 10:41 IST

எழுத்தின் அளவு:


Wake-Up-Boney-Kapoor-:-Ajith-fans-troll-the-porudcer

“அப்டேட், அப்டேட், அப்டேட்,” என அதிகமாகக் கேட்பது அஜித் ரசிகர்கள் தான். அஜித் நடித்து கடைசியாக வெளிவந்த ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் எங்கெல்லாம் கேட்டார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். பிரதமர் மோடி வருகை, கிரிக்கெட் போட்டி என பல இடங்களிலும் ‘வலிமை அப்டேட்’ என குரல் எழுப்பி சர்ச்சைகளை ஏற்படுத்தினார்கள்.

அஜித் தற்போது நடித்து வரும் அவரது 61வது படம் குறித்த அப்டேட்டையும் படக்குழு சரியாக வெளியிடுவதில்லை. படத்தின் அப்டேட்டை விட அஜித் வெளிநாடு சென்றது, பைக்கில் சுற்றுலா செல்வது போன்ற விஷயங்கள்தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரப்பப்படுகிறது.

ஒரு பக்கம் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் பற்றிய அப்டேட்டும், விஜய் அடுத்து நடிக்க உள்ள அவரது 67 படம் பற்றிய அப்டேட்டுகளும் சமூக ஊடகங்களில் நிறைந்திருக்கின்றன. அஜித்தின் 61வது படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற ஒரு பேச்சு இருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று பின்னர் தகவல் வெளியானது. கிறிஸ்துமஸ் விடுமுறையிலாவது வருமா அல்லது 2023 பொங்கலுக்காவது வருமா என அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

படத்தின் அப்டேட் வெளிவராத காரணத்தால் ‘#WakeUpBoneyKapoor” என தற்போது டிரெண்டிங் செய்து வருகிறார்கள். “நேர்கொண்ட பார்வை, வலிமை, அஜித் 61” என தொடர்ந்து அஜித் நடிக்கும் படங்களுக்கு போனி கபூர்தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.Source link

Leave a Reply

Your email address will not be published.