தமிழில், ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர், இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர், நடிகர் நானா படேகர் மீது கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் புகார் கூறியிருந்தார். அதை மறுத்திருந்த நானா படேகர் அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், தனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு நானா படேகர்தான் பொறுப்பு என்று சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.

பிறகு, தனது வேலைக்காரப் பெண், குடி தண்ணீரில் ரசாயானத்தை கலந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் விபத்தில் பலத்த காயம் அடைந்து அதிலிருந்து குணமடைய நாட்கள் ஆனது என்றும் கூறியிருந்தார்.

இப்போது அளித்துள்ள பேட்டி ஒன்றிலும் அதை மீண்டும் தெரிவித்துள்ள அவர், பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசிய பிறகு, பல்வேறு வழிகளில் தன்னைக் கொல்ல சதி நடந்ததாகத் தெரிவித்துள்ளார். இது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published.