சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதி விட்டதால், இப்போதே விஏஓ ஆகி விட்டதாக கனவு காண்பவர்களை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை விஏஓ கனவுடன் தேர்வர்கள் எழுதி முடித்துள்ளனர். எப்படியும் விஏஓ ஆகி விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் அவர்களை, ‘தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்துக்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம்..’ என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இப்போதுதான் தேர்வு முடிந்திருக்கிறது.. ஆனால் அதற்குள் அவர்களை ‘விஏஓ சார்.. விஏஓ சார்’.. என அழைத்து வெறுப்பேற்றும் விதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பிச்சுமணி காமெடியை விஏஓ மீம்ஸ் ஆக்கியதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்.. விக்ரம் படத்தில் தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தையும் விஏஓவாக்கி கலகலக்க வைத்துள்ளனர். சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே, டிஎன்பிஎஸ்சியும், விஏஓ மீம்ஸ்களும் தான் கொட்டிக் கிடக்கின்றன.

இதோ, அவற்றில் சில ஜாலியான கலாய்ச்சிபை மீம்ஸ்கள் உங்களுக்காக…

3 நிமிடம் தான்! வாழ்க்கை போயிரும்..தயவுசெஞ்சு உள்ளே விடுங்க! கதறிய தேர்வர்கள்! கறார் காட்டிய ஆபிசர்!

Source link

Leave a Reply

Your email address will not be published.