உன்னி முகுந்தன் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பந்தள ராஜா குடும்பத்தினர்

16 செப், 2022 – 12:25 IST

எழுத்தின் அளவு:


Pandalam-raja-family-visits-to-Unni-mukundan-movie-shooting-spot

தமிழ் ரசிகர்களுக்கு தனுஷ் நடித்த ‘சீடன்’ படம் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். அதுமட்டுமல்ல பாகமதி படத்தில் அனுஷ்காவின் ஜோடியாக நடித்த இவர், தற்போது யசோதா என்கிற படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் உருவாகி வரும் மாளிகைப்புரம் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சுவாமி ஐயப்பனின் பக்தையான மாளிகைப்புரத்து அம்மனை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

இதில் அய்யப்ப பக்தையாக சிறுமி தேவானந்தா என்பவர் நடிக்கிறார். இந்த படத்தை விஷ்ணு சசி சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். அமலாபால் நடித்த கடாவர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளைதான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது எருமேலியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாளிகைப்புறம் குறித்த கதையாக இது உருவாகி வருவதால் இதுபற்றி அறிந்து கொள்ளவும் படப்பிடிப்பு தளத்தை பார்வையிடவும் பந்தள ராஜ குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளான தீபா வர்மா, அருண் வர்மா மற்றும் சுதின் கோபிநாத் ஆகியோர் மாளிகைப்புறம் படத்தின் துவக்க விழா பூஜையில் கலந்து கொள்வதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தனர். அங்கே உன்னி முகுந்தன் மற்றும் சிறுமி தேவானந்தா உள்ளிட்ட படக்குழுவினருடன் நீண்ட நேரம் உரையாடி விட்டு பின்னர் விடைபெற்றுச் சென்றனர். பந்தள ராஜா குடும்பமே தங்களது படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் வந்ததால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.