இளவரசியாக நடிக்கும் டிகங்கனா சூர்யவன்ஷி

23 செப், 2022 – 17:05 IST

எழுத்தின் அளவு:


Actress-Digangana-Suryavanshi-act-in-princess-character

சமீபத்தில் வெளியான ‘சீதாராமம்’ திரைப்படத்தில் நடித்த மிருணாள் தாக்கூரின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இப்படத்தில் சீதா மகாலட்சுமி என்ற இளவரசி கேரக்டரில் அவர் நடித்து பாராட்டை பெற்றார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி-யும் இளவரசி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் பொன்குமரன் இயக்கத்தில் உருவாகும் ‘மஹால்’ என்ற திரைப்படம் 500 ஆண்டுகளுக்கு முந்தைய கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தில் இளவரசியாக டிகங்கனா சூர்யவன்ஷி நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை லால்பாக் அரண்மனையில் நடைபெற்றது. இந்த படத்தில் இளவரசியாக நடிப்பது தனது கனவு நனவானதாக உணர்கிறேன் என்று நடிகை டிகங்கனா சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரண்மனையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தில் நடிகை வேதிகா வில்லியாக நடிக்க உள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Source link

Leave a Reply

Your email address will not be published.