இன்று மாலை ‘வெந்து தணிந்தது காடு’ சக்சஸ் மீட்

18 செப், 2022 – 10:11 IST

எழுத்தின் அளவு:


Today-success-meet-Vendhu-thanindhathu-kaadu

கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிம்பு, சித்தி இட்னானி மற்றும் பலர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த படம் ‘வெந்து தணிந்தது காடு’. இரு விதமான விமர்சனங்களும், கமெண்ட்டுகளும் இந்தப் படத்திற்கு வந்துள்ளன. முதல் பாதி நன்றாக இருந்ததென்றும், இரண்டாம் பாதி வழக்கமான தாதா படமாக இருந்ததென்றும் பலரும் பொதுவான கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள்.

படம் வெளியாகி இன்றுடன் நான்கு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் படத்திற்கான சக்சஸ் மீட்டை இன்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் இதற்கு முன்பு வெளியிட்ட “கேப்டன், கோப்ரா, டைரி, லால் சிங் சத்தா, குளு குளு” ஆகிய படங்கள் சரிவரப் போகாமல், வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவியது என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

இருப்பினும் கடந்த நான்கு நாட்களில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் சுமாரான வசூலைப் பெற்றிருக்கிறது. படத்திற்கான வசூல் நிலவரம் எப்படி என்பது நாளை திங்கள் கிழமை முதல்தான் தெரிய வரும். வரும் நாட்களிலும் படத்தின் வசூலை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள படம் வெற்றி என விளம்பரப்படுத்த இன்று சக்சஸ் மீட் வைத்துள்ளதாகத் தகவல்.Source link

Leave a Reply

Your email address will not be published.