இசை நிகழ்ச்சி நடத்தும் சிவாங்கி

08 செப், 2022 – 11:00 IST

எழுத்தின் அளவு:


Shivangi-conducting-music-show

சின்னத்திரையில் பாடல் போட்டி மூலம் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி. அதன் பிறகு குக் வித் கோமாளி மூலம் பிரபலமானார். அவரது குழந்தைத்தனமான முகமும் வேடிக்கையான சேட்டைகளும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளது. இந்த பாபுலாரிட்டி அவரை சினிமாவுக்கும் அழைத்து வந்தது. டான் படத்தில் நடித்த அவர் தற்போது காசேதான் கடவுளடா, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சோலோ இசை நிகழ்ச்சி நடத்துகிறார் சிவாங்கி. நாளை (செப்டம்பர் 9) முதல் வருகிற 11ந் தேதி வரை சென்னை பீனிக்ஸ் மாலில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் சிவாங்கியின் கச்சேரி நடக்கிறது. இதில் சிவாங்கி பாடுவது மட்டுமல்லாமல் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடத்த உள்ளார். சிவாங்கியோடு சந்தோஷ் பாலாஜி, செபாஸ்டியன், விஜே கணேசன், லக்ஷ்மன், மேக்னஸ், அக்ராஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.Source link

Leave a Reply

Your email address will not be published.