இணையத்தள

ஓய்-ஷியாம்சுந்தர் ஐ

புதுப்பிக்கப்பட்டது: வியாழன், ஆகஸ்ட் 11, 2022, 16:10 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் நெட்டிசன்கள் இடையே புதிதாக ராக்கர்ட் பாய்ஸ் குறித்த விவாதம் ஒன்று எழுந்துள்ளது. இவர்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று பலரும் இணையத்தில் கூறி, டிரெண்ட் செய்து வருகிறார்கள். என்னதான் நடக்கிறது? ஏன் இந்த விவாதம் இப்போது தோன்றியது?

தமிழ் சூழலில் பல காலமாக இருக்கும் விவாதம்தான் இது. முன்பு முரட்டுத்தனமான ஆள் vs பழம் என்ற விவாதம் தற்போது சாக்லேட் பாய்ஸ் vs ரக்கர்ட் பாய்ஸ் என்று மாறி உள்ளது. ரக்கர்ட் பாய்ஸ் என்றால் வேறு ஒன்றும் இல்லை முரட்டுத்தனமான பாய்ஸ்.

அடிக்கடி கோபம் அடையும், சுர்ரென கோபம் கொள்ளும் பாய்ஸ் எல்லாம் ரக்கர்ட் பாய்ஸ்தான். காதல் கொண்டேன் தனுஷ் சாக்லேட் பாய் என்றால்.. சுள்ளான் பட தனுஷ் ரக்கர்ட் பாய் என்று சொல்லலாம். அவ்வளவுதான்.

இந்த சாக்லேட் பாய்ஸ் vs ரக்கர்ட் பாய்ஸ் விவாதம் இப்போது எழுவதற்கு zee தமிழ் சேனலில் நடந்த தமிழா தமிழா நிகழ்ச்சி விவாதம் ஒன்றுதான் காரணம்.

எப்படி தொடங்கியது?

எப்படி தொடங்கியது?

இது 2019ல் வந்த எபிசோட் ஆகும். ஆனால் இதை நெட்டிசன்கள் பலர் தற்போது சுற்றலில் விட்டுள்ளனர். அதில் சிவப்பு உடை அணிந்த பெண் ஒருவர் ரக்கர்ட் பாய்ஸ்தான் அழகு என்று சொல்லி இருப்பார். அவங்கதான் அடிக்கடி சண்டை போடுவாங்க. ரோட்டில் யாராவது நம்மை சைட் அடித்தால் சண்டைக்கு போவார்கள். எப்போதும் அவர்கள் சண்டை போடுவது போலவே இருப்பார்கள். அவர்களைத்தான் எங்களுக்கு பிடிக்கும்.

  சாக்லேட் பாய்ஸ்

சாக்லேட் பாய்ஸ்

சாக்லேட் பாய்ஸ் என்றால் பயப்படுவார்கள். அவர்கள் சண்டைக்கு போக மாட்டார்கள். அவர்களை எங்களுக்கு பிடிக்காது என்று அந்த பெண் குறிப்பிட்டு இருந்தார்.இதுதான் தற்போது இணையம் முழுக்க இத்தனை நாட்கள் கழித்து டிரெண்டாகி உள்ளது. அந்த பெண் சண்டை போடும் ஆண்களை, கோபம் கொள்ளும் ஆண்களைத்தான் பிடிக்கும் என்று சொன்னது விவாதம் ஆகி உள்ளது. இதை பலர் பகிர்ந்து கடுமையான கமெண்ட்களை வைத்து வருகிறார்கள்.

வாதம் - விவாதம்

வாதம் – விவாதம்

ஆண்கள் வைக்கும் வாதம்படி.. ரக்கர்ட் பாய்ஸ் அழகு என்பது வெளியில் இருந்து வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அதே ஆண்கள் சண்டைக்கு போய், பிரச்சனை ஆகும் போது அந்த கஷ்டம் புரியும். இதே ராக்கர்ட் பாய்ஸ் ஆண்கள்தான் துஷ்பிரயோக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சினிமாவை பார்த்துவிட்டு ஆண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. பெண்கள் என்றால் “அடக்க ஒடுக்கமாக” இருக்க வேண்டும் என்பது எப்படி தவறான புரிதலோ அல்லது ஆண்கள் என்றால் முரட்டுத்தனமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறான கருத்து

ஆண்கள் சொல்வது என்ன?

ஆண்கள் சொல்வது என்ன?

ஆனால் பெண்கள் வைக்கும் வாதங்களிலோ.. அந்த பெண் சொன்னது என்ன தவறு. ஆண்கள் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்தால்தான் கெத்தாக இருக்கும். ஒரு காலத்தில் மாதவன்தான் சாக்லேட் பாய். ஆனால் அந்த மாதவனே இப்போது இறுதிச்சுற்று போன்ற படத்தில் நடித்து ரக்கர்ட் பாயாக மாறிவிட்டார். ரக்கர்ட் பாய்ஸ் உடன் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். அதோடு சாப்டாக இருக்கும் பாய்ஸ் எதிர்காலத்தில் உடைமையாகி.. எல்லாவற்றுக்கும் சந்தேகம் அடையும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் வாதம் வைத்து வருகிறார்கள்.

இன்செக்யூரிட்டி

இன்செக்யூரிட்டி

இன்னும் சில ஆண்கள் அந்த பெண்ணுக்கு சப்போர்ட்டாக பேசி உள்ளனர். அந்த பெண்ணுக்கு ரக்கர்ட் பாய்ஸ் பிடிக்கும் என்று கூறி உள்ளார். அது அவரின் தனிப்பட்ட விருப்பம். இதில் என்ன தவறு. ஏன் இந்த சாப்ட் பாய்ஸ் இவ்வளவு அச்சப்படுகிறார்கள். ஏன் “இன்செக்யூரிட்டி” என்று பேசுகிறார்கள் என்று வாதம் வைத்துள்ளனர். சில பெண்களோ அந்த பெண் பழமைவாதம் பேசுகிறார்.. எங்களுக்கு எல்லாம் சாப்ட் பாய்சைதான் பிடிக்கும் என்று கூறி அந்த பெண்ணுக்கு எதிராகவே கருத்து வைத்துள்ளனர்.

சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது

சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது

இந்த சிலரோ.. யாருக்கு யாரை பிடித்தால் உங்களுக்கு என்ன? அந்த பெண்ணுக்கு ஒரு டைப் ஆண்களை பிடிக்கிறது. மற்ற பெண்களுக்கு வேறு டைப் ஆண்களை பிடிக்கும். ஒரு பெண்ணுக்கு ரக்கர்ட் பாய்ஸ் பிடிக்கும் என்பதால் அதை generalize செய்ய கூடாது. இதை எல்லாம் விவாதம் செய்ய வேண்டியது இல்லை. இப்படி அனைத்தையும் பொதுப்படுத்த தேவையில்லை என்றும் கூறி வருகின்றனர். இணையம் முழுக்க இது தொடர்பான சீரியஸ் விவாதம் நடந்து வருகிறது.

ஆங்கில சுருக்கம்

யார் சிறந்தவர்? சாக்லேட் பையன்களா அல்லது முரட்டுத்தனமான ஆண்களா? தமிழ் சமூக ஊடகங்களில் மீம்ஸ் ட்ரெண்டிங்கில் யார் சிறந்தவர்? சாக்லேட் பையன்களா அல்லது முரட்டுத்தனமான ஆண்களா? தமிழ் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் மீம்ஸ். தமிழ்நாட்டில் நெட்டிசன்கள் இடையே புதிதாக ராக்கர்ட் பாய்ஸ் குறித்த விவாதம் ஒன்று எழுந்துள்ளது. இவர்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று பலரும் இணையத்தில் கூறி, டிரெண்ட் செய்து வருகிறார்கள். என்னதான் நடக்கிறது? ஏன் இந்த விவாதம் இப்போது தோன்றியது?

Source link

Leave a Reply

Your email address will not be published.