பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், கீதா ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். ஆஹா என்ற ஓடிடி தளத்தையும் நடத்தி வருகிறார்.

அவர், ஹைதராபாத் புறநகரில் உள்ள காந்திபேட் பகுதியில், பத்து ஏக்கர் பரப்பளவில் அல்லு ஸ்டூடியோஸ் என்ற திரைப்படப் படப்பிடிப்பு தளத்தை கட்டி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு இதற்கான பூஜை போடப்பட்டது. இப்போது இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. இதையடுத்து வரும் 1-ம் தேதி அல்லு அர்ஜுனின் தாத்தாவும் பிரபல தெலுங்கு குணசித்திர நடிகருமான அல்லு ராமலிங்கையா பிறந்த நாளில் இந்த ஸ்டூடியோவை திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.Source link

Leave a Reply

Your email address will not be published.