அனுமதி மறுத்த போலீஸ் : கடைசி நேரத்தில் சமாளித்த பிரம்மாஸ்திரா டீம்

03 செப், 2022 – 13:54 IST

எழுத்தின் அளவு:


Brahmastra-movie-promotion-cancelled-in-last-minute

ஹிந்தியில் ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா, ஆலியா பட் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா. இந்தபடம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தென்னிந்தியாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் ஐதராபாத்தில் உள்ள மால் ஒன்றில் நேற்று இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. ஆனால் முறையான அனுமதி பெறவில்லை என்கிற காரணத்தை கூறி, அங்கே நிகழ்ச்சியை நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சி கேன்சலானதால் கூடியிருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் களைந்து சென்றனர்.

அந்த நிகழ்ச்சி ரத்தானதை தொடர்ந்து, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த படத்தின் பிரஸ்மீட்டை நடத்தினர் பிரம்மாஸ்திரா படக்குழுவினர். இந்த நிகழ்வில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பொதுவெளியில் இன்று திட்டமிட்டபடி புரமோஷன் நிகழ்ச்சியை நடத்த முடியாமல் ரத்தானதற்கு, ரசிகர்களிடம் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.

Source link

Leave a Reply

Your email address will not be published.