அஜித்துடன் ‘பைக்’ சுற்றுப் பயணம் சென்றுள்ள மஞ்சுவாரியர்

03 செப், 2022 – 10:18 IST

எழுத்தின் அளவு:


Manjuwarrier-bike-ride-with-Ajith-and-his-Team

மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரும், தமிழில் ‘அசுரன்’ படத்தில் நடித்தவருமான மஞ்சு வாரியர் தற்போது அஜித்தின் 61வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மஞ்சு வாரியர் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

அஜித் மற்றும் பைக்கில் சுற்றும் குழுவினருடன் அவரும் பைக் ஓட்டிக் கொண்டு லடாக் சென்றுள்ளார். தங்களது ‘சாகச சவாரி’ குழுவிற்கு மஞ்சுவை வரவேற்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்தக் குழுவில் உள்ள ஒருவர். மஞ்சுவும் சில புகைப்படங்களை வெளியிட்டு தனது சுற்றுப் பயண அனுபவம் பற்றியும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்குமார் சாருக்கு பெரும் நன்றி. இந்திய சாகச சவாரி குழுவினருடன் டூ வீலர் சுற்றுலா செல்வதில் பெருமை,” எனக் குறிப்பிட்டுள்ளார். நள்ளிரவில் மஞ்சு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பல்லாயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published.